ரஷ்யா கூலிப்படையாக இலங்கை இராணுவத்தை அனுப்பிய அதிகாரி கைது
ரஷ்யா – உக்ரைன் போருக்கு கூலிப்படையாக ஓய்வுபெற்ற இராணுவத்தினரை அனுப்புவதற்கு முக்கிய சூத்திரதாரியாக செயல்பட்டதாகக் கூறப்படும் இராணுவ முன்னாள் மேஜர் ஜெனரல் ஒருவரும் அவருக்கு ஆதரவாக இருந்த முன்னாள் சார்ஜென்டும் மனித கடத்தல் மற்றும் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.
குருநாகல் பகுதியைச் சேர்ந்த 67 மற்றும் 50 வயதுடைய முன்னாள் மேஜர் ஜெனரல் மற்றும் முன்னாள் இராணுவ சார்ஜன்ட் ஆகிய இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பிரகாரம், மேஜர் ஒருவர் உட்பட இருவர் இதற்கு முன்னர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
குற்றப் புலனாய்வுப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஹான் பிரேமரத்னவின் பணிப்புரைக்கு அமைய மனித கடத்தல் மற்றும் கடல்சார் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.