யாழில் மூன்று பிள்ளைகளின் தாய் கற்பழிக்கப்பட்டு கொலை!!
யாழ்ப்பாணம் மருதங்கேணி, தாளையடி பகுதியில் பெண்ணொருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக மருதங்கேணி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மூன்று பிள்ளைகளின் தாயான 44 வயதுடைய பெண்ணின் சடலம் அவரது வீட்டின் கழிவறைக்கு முன் இருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
வீட்டின் கழிவறைக்கு முன்பாக வைக்கப்பட்டிருந்த நீர் நிரப்பப்பட்ட கொள்கலனினுள் (பரல்) தலை மூழ்கிய நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார்
அவரின் கணவர் மீன்பிடித் தொழிலுக்காக சென்று மீண்டும் வீடு திரும்பிய போது, வீட்டுக்கு அருகில் மனைவி சடலாமக கிடந்ததை பார்த்துள்ளார்.
உடனடியாக மனைவியை பருத்தித்துறை வைத்தியசாலையில் அனுமதிக்க முற்பட்ட போது அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
சடலம் மீது மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில், குறித்த பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டமை தெரியவந்துள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை மருதங்கேணி பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.