யாழ்ப்பாணம் திருநெல்வேலி சாப்பாட்டுக்கடை சோற்று பாசலில் மட்டைத் தேள்!
கடந்த வெள்ளிக்கிழமை திருநெல்வேலியில் உள்ள உணவகத்தில் சோற்று பாசலில் மட்டைத்தேள் காணப்பட்டதாக அப்பகுதி பொது சுகாதார பரிசோதகர் பா.சஞ்சீவனிற்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.
இதை அடுத்து குறித்த உணவகம், பொது சுகாதார பரிசோதகரால் திடீர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதன்போது முன் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்கள் பின்பற்றாப்படாமல் சுகாதார சீர் கேட்டுடன் உணவகம் இயங்குவது அவதானிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து நேற்றைய தினம் திங்கட்கிழமை (27.05.2024) கடை உரிமையாளரிற்கு எதிராக மேலதிக நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கினை இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்து கொண்ட நீதவான், உரிமையாளரிற்கு 45,000/= தண்டம் அறவிட்டதுடன் கடையினை திருத்த வேலைகள் முடிவடையும் வரை சீல்வைத்து மூடுமாறு பொது சுகாதார பரிசோதகரிற்கு கட்டளை வழங்கினார்.
இதனையடுத்து பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவனால் குறித்த உணவகம் இன்றைய தினம் சீல் வைத்து மூடப்பட்டது…