பொது வேட்பாளர் தொடர்பில் யாழில் கலந்துரையாடல்
நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பான கலந்துரையாடல் இன்று சிவில் சமூகத்தினர் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் காலை 11 மணியளவில் இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் வேலன் சுவாமி, மத குருமார்கள், இணை ஒருங்கிணைப்பாளர் சீலன், அரசியல் ஆய்வாளர் சட்டத்தரணி சி.அ.யோதிலிங்கம், பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம், பொருகலியல் ஆய்வாளர் இரானியல் செல்வின், யாழ்மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர், வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் அமைப்புக்கள், வடக்கு கிழக்கு சிவில் அமைப்புக்கள், குரல் அற்றோர் குரல் அமைப்பு, சமூக விஞ்ஞான ஆய்வு மையம், இரணைமடு கமக்கார அமைப்பு, கிழக்கு தமிழ் விவசாயிகள் அமைப்பு, யாழ்ப்பாணம் வணிகர் கழகம், தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம், மயிலத்தமடு மேச்சல் தரை போராட்ட குழு, சிரேஸ்ர ஊடகவியலாளர்கள் உட்பட பொது சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.