15 வயது மாணவனை கொலை செய்த 17 வயது மாணவன்

ஹம்பாந்தோட்டை சமோதகமையில் 15 வயது மாணவனை கொலை செய்த 17 வயது மாணவனை எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க ஹம்பாந்தோட்டை நீதவான் உத்தரவிட்டார்.

உயிரிழந்த மாணவனுக்கும், தாக்கியதாகக் கூறப்படும் நபருக்கும் கிரிக்கெட் போட்டியின் போது ஏற்பட்ட தகராறே தாக்குதலுக்குக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்த மாணவன் கடந்த 5ஆம் திகதி சமோதகம பகுதியில் உள்ள பயிற்சி வகுப்புக்கு சென்ற போதே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. தாக்குதலால் படுகாயமடைந்த மாணவன் ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் இடத்திற்கு நேற்று (06) காலை சென்ற ஹம்பாந்தோட்டை நீதவான் விசாரணைகளை மேற்கொண்டு சடலத்தை பிரேத பரிசோதனைக்கு சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன் சந்தேகநபரை எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.