மதுபோதையில்  இளைஞனை மோதிவிட்டு தப்பியோடிய வைத்தியருக்கு கிடைத்த அதிர்ச்சி வைத்தியம்

மதுபோதையில் வைத்தியர் ஒருவர்  மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞனை மோதிவிட்டு தப்பி சென்ற சம்பவம் கல்முனை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்தை அடுத்து குறித்த காரையும், வைத்தியரையும் கல்முனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று இரவு (08-06-2024) இடம்பெற்றுள்ளது.

இதில் காயமடைந்த இளைஞன் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில்  சிகிச்சை பெற்று வருகின்றார்.

விபத்தை ஏற்படுத்திய பின் தப்பி சென்ற கார் அதே வைத்தியசாலை வளாகத்தில் நின்ற நிலையில், காரை செலுத்தி சென்ற வைத்தியர் கைது செய்யப்பட்டு கல்முனை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைதான வைத்தியர் என கூறப்படும் நபரிடம் பொலிஸார் வாக்குமூலத்தை பெற்று வருவதுடன் விரிவான விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர்.

அத்துடன் காரினை செலுத்திய வைத்தியருக்கு வாகன சாரதி அனுமதி பத்திரம் இல்லை எனவும் குடிபோதையில் காரினை செலுத்தி வந்துள்ளதாக விபத்தை நேரில் பார்த்தவர்கள் குறிப்பிட்டனர்.

மேலும் காயமடைந்த இளைஞன் செலுத்தி சென்ற மோட்டார் சைக்கிளும் சேதமடைந்த நிலையில் கல்முனை பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.