யாழில் வைத்தியர் தற்கொலை
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை விடுதிக்குள் தவறான முடிவெடுத்து வைத்தியர் ஒருவர் உயிரை மாய்த்துள்ளார்.
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் மகப்பேற்று விடுதியில் கடமையாற்றும் 30 வயதுடைய பிரேம்குமார் கிரிசாந் என்பவரே இவ்வாறு உயிரை மாய்த்துள்ளார்.
கொழும்பை சேர்ந்த இவர், காதல் விவகாரத்தினால் உயிரை மாய்த்ததாக கருதப்படுகிறது.
இவரது காதலியென கருதப்படும் யுவதியொருவர் தொலைபேசியில் வழங்கிய தகவலை அடுத்து, வைத்தியசாலை நிர்வாகத்தினர், வைத்தியரின் விடுதி கதவை உடைத்து சென்று பார்த்த போது, வைத்தியர் சடலமாக மீட்கப்பட்டார்.
அவரது மூக்கிற்குள் பஞ்சுகள் வைக்கப்பட்டிருந்தது. அவர் ஏதோவொரு வகை மருந்தை செலுத்தி உயிரை மாய்த்திருக்கலாமென கருதப்படுகிறது.