பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் ஈழத்தமிழ் பெண் வெற்றி
பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் தொழிற்கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஈழத்தமிழ் பின்ணணியை கொண்ட உமாகுமரன் (Uma Kumaran) வெற்றி பெற்றுள்ளார்.
இவர் லண்டன் ஸ்டராட்ஃபோர்டு தொகுதியில் 19,145 வாக்குகளை பெற்று பெரும் வெற்றியடைந்துள்ள நிலையில், பிரித்தானிய வரலாற்றில் முதல் தமிழ்பெண் அமைச்சர் எனும் பெருமையை பெற்றுள்ளார்.
இந்த வெற்றி மூலம் பிரிட்டன் நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் முதலாவது ஈழத்தமிழ் பெண் எனும் பெருமை அவருக்கு கிடைக்கவுள்ளது.
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை மூலம் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துவதன் மூலம் மாத்திரமே நீதியை நிலைநாட்டமுடியுமென உமாகுமரன் (Uma Kumaran) தேர்தல் பிரச்சாரங்களின் போது தெரிவித்திருந்தமை முக்கிய அம்சமாகும்.