சம்பந்தனின் இறுதி சடங்கில் தமிழக முதல்வர் ஸ்டாலின்
தமிழரசு கட்சியின் பெருந்தலைவர் இரா.சம்பந்தனின் இறுதி சடங்கில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்துகொள்வதற்கான சந்தர்ப்பங்கள் உள்ளதாகா நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
சம்பந்தனின் இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக பல பிரமுகர்கள் வருகின்றனர். பா.ஜ.க.வின் தமிழக மாநில தலைவர் அண்ணாமலை சம்பந்தனின் இறுதி சடங்கில் கலந்துகொள்வது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதை அண்ணாமலையே என்னிடம் உறுதிப்படுத்தினார்.
அத்துடன் தமிழக முதல்வர் ஸ்டாலினும் கலந்துகொள்ள உள்ளாதாக தகவல்கள் கிடைத்துள்ளது. எனினும் அது உறுதிப்படுத்தப்படவில்லை என்றார்.