பிள்ளையான் குரூப் சணக்கியனை கொலை செய்ய திட்டம்?
தமக்கு உயிராபத்து இருப்பதாக வெளியான செய்தி ஒன்று தொடர்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் நாடாளுமன்றில் இன்று சுட்டிக்காட்டினார்.
பிள்ளையான் எனப்படும் சந்திரகாந்தன் தரப்பு சாணக்கியனை கொலை செய்ய திட்டமிட்டுள்ளதாக சர்வதேச புலனாய்வு பிரிவு மூலம் தகவல் கிடைத்திருப்பதாக இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இது குறித்து நாடாளுமன்றில் சாணக்கியன், இச்செய்தி தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, காவல்துறைமா அதிபருக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக தெரிவித்தார்.