யாழ் நீதிமன்று அருகில் வாள் வெட்டு – சந்தேகநபர் கைது
யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற வழக்கு விசாரணைக்கு சென்று விட்டு , வீடு திரும்பியவரை வாளினால் வெட்ட முயன்ற குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த மே 30ஆம் திகதி வழக்கு விசாரணைக்கு சென்று விட்டு , வீடு திரும்ப முற்பட்டவரை , நீதிமன்ற கட்டட தொகுதிக்கு அருகில் மூவர் அடங்கிய வன்முறை கும்பல் வாளினால் வெட்ட முயன்றனர்.
இந்நிலையில் இதில் இருந்து தப்பித்த இளைஞன், நீதிமன்றில் தஞ்சமடைந்துள்ளார். அது தொடர்பில் உடனடியாக நீதவானின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. தாக்க முயற்சித்த மூவரையும் உடனடியாக கைது செய்து நீதிமன்றில் முற்படுத்த மன்று காவல்துறையினருக்கு உத்தரவிட்டது.
மூவரையும் கைது செய்ய பொலிஸார் தீவிர வேட்டையில் இறங்கிய நிலையில், மூவரும் தலைமறைவாகினர்
இந்நிலையில், 55 நாட்களின் பின் மூவரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட நபருக்கு யாழில் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 04 திறந்த பிடியானைகள் உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.