வெடுக்குநாறி ஆதி லிங்கேஸ்வரர் ஆலய பூசகரிடம் TID விசாரணை
வவுனியா வெடுக்குநாறி ஆதி லிங்கேஸ்வரர் ஆலய பூசகரிடம் பயங்கரவாத புலனாய்வு பிரிவின் வவுனியா அலுவலகத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வவுனியா பயங்கரவாத புலனாய்வு பிரிவிற்கு வருமாறு கிராம சேவையாளர் ஊடாக விடுக்கப்பட்ட அழைப்பினை அடுத்து ஆலய பூசகர் சென்று இருந்தார்.
அங்கு கடும் விசாரணைகள் இடம் பெற்றதோடு வெடுக்குநாறி ஆலயம் தொடர்பான பல விடயங்களும் வினாவப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த சிவராத்திரி தினத்தில் வெடுக்குநாறி ஆதி லிங்கேஸ்வரர் ஆலய பூஜை வழிபாட்டின் பொலிசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் பெரும் முருகல் ஏற்பட்ட நிலையில் பொலீசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டவர்களில் ஆலய பூசகரும் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.