யாழ் பண்ணையில் 10 மோட்டார் சைக்கிள்களுடன் இளைஞர்கள் கைது
யாழ் பண்ணை பகுதியில் மது போதையில் வாகனம் செலுத்தியவர்கள், பொலிசாரின் கட்டுப்பாடுகளை மீறி வாகனம் செலுத்தியவர்கள், போக்குவரத்துக்கு இடையூறாக மோட்டார் சைக்கிள் ஓட்டியவர்கள் என 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வழமையாக ஞாயிற்றுக்கிழமைகளில் யாழ்ப்பாணம் பண்ணை பகுதி மக்கள் வெள்ளத்தில் நிரம்பி வழிவது பொதுவான ஒரு விடையமாகும். நடை பயிற்சி செய்வதற்கென ஒரு கூட்டமும், குழந்தைகளுடன் கடற்கரையில் பொழுதை கழிக்க பொற்றோர்களும், உள்ளாசமாக கொஞ்சி குழாவுவதற்காக காதல் ஜோடிகளும், சைற் அடிப்பதற்காக இளைஞர் யுவதிகளும் என பண்ணை பகுதியில் கூடுவார்கள்.
இவ்வாறான நேரங்களில் இளைஞர்கள் குழுக்களாக மோட்டார் சைக்கிளை பெரிய சத்தங்களுடன் மக்களை பயமுறுத்தும் வகையில் செலுத்துதல், மக்களுக்கு இடைஞ்சலை ஏற்படுத்தும் விதத்தில் செயற்பட்டு வந்தனர்.
இந்நிலையில் யாழ் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சூரிய பண்டாரவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதை அடுத்து, போக்குவரத்து பொலிஸார் இன்று மாலை பண்ணை பகுதியில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டனர்.
அதன் போது மோட்டார் சைக்கிளை ஆபத்து விளைவிக்கும் வகையாக செலுத்தியமை , போக்குவரத்து விதிமுறைகளை மீறியமை மது போதையில் வாகனம் செலுத்தியமை என பல குற்றச்சாட்டுக்களில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் அவர்களின் 10 மோட்டார் சைக்கிள்களையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள 10 பேரையும் , அவர்களின் மோட்டார் சைக்கிள்களையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ள பொலிஸார், நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளனர்.