கொழும்பில் சூட்கேஸ் பேரத்தில் தமிழ் தலைமைகள்
பொது வேட்பாளர் எனும் மாஜமானை காட்டி தெற்கில் இருந்து கல்லா கட்டுவதில் முந்நாள் மற்றும் இந்நாள் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மும்முரமாகியுள்ளனர்.
வரும் ஜனாதிபதி தேர்தலுக்கு தமிழ் பொது தமிழ் வேட்பாளரை நிறுத்தி உலகிற்கு தமிழ் மக்களின் நிலைப்பாடுகளையும் மற்றும் நியாயங்களையும் எடுத்துரைப்பது என்கின்ற தமிழ் பொது அமைப்புக்களின் முயற்சியில் அரசியல்வாதிகள் சிலரும் இணைந்துள்ளனர்.
ஏற்கனவே சிவில் சமூகமென கையெழுத்திட்ட சிலரே இந்தியா கார் சீன வீடு அமெரிக்க விஸ்கி என வித்தைகளில் உள்ள நிலையில் தற்போது சிலி சில அரசியல் தலைவர்களும் மும்முரமாகியுள்ளனர்.
தமது நிலைப்பாடு பொது வேட்பாளரே என்று அடித்துப் பிடித்துக்கொண்டு அறிக்கைகளையெல்லாம் விட்டுள்ள அவர்கள் மறுபுறம் தென்னிலங்கையில் பேரத்தில் உள்ளனர்.
ஏற்கனவே ஒரு பகுதியினர் மதுபானச்சாலைகளிற்கான பெமிட் அபிவிருத்தி நிதியென கோடிகளில் வாங்கிவிட ஓட்டத்தில் பிந்திய சுமந்திரனோ தனித்து இரவு ரணிலை சந்தித்து அலுவல் முடித்து திரும்பியுள்ளார்.
ஏற்கனவே சரத் பொன்சேகாவிற்கு இரண்டு மூன்று பெட்டிகள் வாங்கிப் பதுக்கியவர்கள் பின்னர் நல்லாட்சியை காப்பாற்ற போய் கொழும்பில் வீடு லண்டனில் வீடென ஜமாய்த்துவிட்டனர்.
தற்போது இந்தத் தலைவர்கள் தற்பொழுது கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்துள்ள தமிழ் பொதுவேட்பாளர் விடயத்தை முன்நிறுத்தி ஐந்து ஆறு பெட்டிகள் வரை சிரித்துக்கொண்டு கேட்கின்றார்களானெ கொழும்பு ஊடக வட்டாரங்கள் கூறுகின்றன.