தமிழகத்தை சேர்ந்த 74 பேர் யாழ்ப்பாண சிறையில்

அத்துமீறி நுழைந்து இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட 74 தமிழக கடல் தொழிலாளர்களும் யாழ்ப்பாண சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

பல்வேறு காலகட்டங்களில் கைதாகி நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுக்கு அமைய தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இதில் 64 பேரின் வழக்குகள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (30) ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்படவுள்ளது.

ஜூலை முதலாம் திகதி 25 கடற்தொழிலாளர்களும், ஜூலை 11ஆம் திகதி 13 கடற்தொழிலாளர்களும், ஜூலை 16ஆம் திகதி 04 கடற்றொழிலாளர்களும்,  ஜூலை 22ஆம் திகதி 22 கடற்தொழிலாளர்களும் கைது செய்யப்பட்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.