முருக பக்தர்களுக்கு வந்த சோதனை, இராணுவ சோதனை சாவடியா நல்லூர்?
வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய பெருந்திருவிழா நாளைய தினம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.
ஆலயத்தை அண்மித்த 500 மீற்றர் சுற்று வட்டத்தில் உள்ள வீதிகள் அனைத்தும் மூடப்பட்டு பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இராணுவச் சோதனை சாவடிகள் போல் நல்லூர் ஆலயத்தின் முகப்பு சூழலில் வீதித்தடைகள் அமைக்கப்பட்டுள்ளதுடன், மக்கள் ஆலயத்திற்கு சுதந்திரமான முறையில் நடந்து செல்ல இடையூறு விளைவிக்கும் விதத்திலும் மாற்றுத் திறனாளிகள் பாதைகளை உபயோகிக்க முடியாதவாறும் வீதித் தடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
கடந்த வருட பெருந்திருவிழாவில் ஏற்பட்ட சனநெரிசலில் பக்தர்கள் பலர் மூச்சுத்தினறலுக்கு உள்ளாகியதுடன் பல ஆபத்துக்களையும் எதிர் நோக்கினர். எனினும் அவை எதனையும் கணக்கில் எடுக்காது குறித்த வீதித்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
மக்களின் நலனில் அக்கறையுடன் யாழ்ப்பாணம் மாநகரசபை மற்றும் பொஸிஸார் செயற்படவேண்டும் என மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.