சஜித் பிரேமதாசவின் குண்டர்கள் யாழ் இளைஞர்கள் மீது கொலை வெறிதாக்குதல், சுட்டு கொலை செய்துவிடுவோம் எனவும் அச்சுறுத்தல்

சஜித் பிரேமதாசவின் குண்டர்கள் யாழ் இளைஞர்கள் மீது கொலை வெறிதாக்குதல், சுட்டு கொலை செய்துவிடுவோம் எனவும் அச்சுறுத்தல்

யாழ்ப்பாணம் நல்லூர் செட்டித்தெருவில் இன்று அதிகாலை சஜித் பிரேமதாசவின் குண்டர்கள் மற்றும் கிழவர்களால் இரு இளைஞர்கள் மீது கொலை வெறிதாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது

நல்லூர் செட்டித்தெருவில் இரு இளைஞர்கள் சம்பளத்திற்கு நிறுவனம் ஒன்றின் விளம்பர போஸ்டர் ஒட்டிக்கொண்டு சென்றுள்ளார்கள்.

இதன்போது கிழிந்த நிலையில் இருந்த சஜித் பிரேமதாசவின் போஸ்டரை அகற்றிவிட்டு அந்த இடத்தில் அந்த நிறுவனத்தின் போஸ்டரை ஒட்டியுள்ளார்கள்.

இந்நிலையில் அந்த பகுதியால் வந்த குண்டர் ஒருவர் அந்த இளைஞர்களின் மோட்டார் சைக்கிளை பறித்துள்ளார். அவருடன் வந்த லக்ஸ் ஹோட்டல் ஓனரும் சஜித் பிரேமதாசவின் யாழ் ஒருங்கிணைப்பாளருமான குடும்பி ஜெயா என அழைக்கப்படும் வெற்றிவேலு ஜெயந்திரன் “என்னை உங்களுக்கு யார் என்று தெரியாது, உங்களை இந்த இடத்திலேயே சுட்டு கொலை செய்துவிடுவோம், எமது ஆட்சியே அடுத்து வரவுள்ளது” என பச்சை தூசன வார்த்தைகளால் பேசி அச்சுறுத்தியுள்ளார்.

கொலை அச்சுறுத்தல் விடுத்த சஜித் பிரேமதாசவின் யாழ் மாவட்ட அமைப்பாளரும் கழுத்தை நசித்த மற்றைய நபரும் படத்தில் வட்டமிடப்பட்டுள்ளனர்.

இதன்போது அந்த இளைஞர்களால் மன்னிப்பு கேட்கப்பட்ட போதும் அவ்விடத்தில் குடும்பி ஜெயாவுடன் நின்ற குண்டர் ஒருவரால் போஸ்டர் ஒட்டிய இளைஞர் ஒருவரின் கழுத்தும் கடுமையாக நசிக்கப்பட்டு, கொலை வெறித்தாக்குதல் முயற்சி இடம்பெற்றுள்ளது.

இதனை அடுத்து பொலிஸ் அவசர இலக்கத்திற்கு தொலைபேசி அழைப்பினை அந்த இளைஞர்கள் மேற்கொண்ட போது, பொலிசார் இங்கு வந்து ஒன்றும் செய்ய முடியாது. பொலிஸ் SSP இப்போதுதான் தம்முடன் இருந்து குடித்துவிட்டு சென்றதாகவும் குடும்பி ஜெயா தெரிவித்து மிரட்டியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.