முன்னணிகளின் துண்டுபிரசுரங்கள் வீதியெங்கும் விநியோகம்

கோத்தபாயவை வீட்டுக்கனுப்பிய மக்கள் போராட்ட முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் நுவன் போபகேயை ஆதரித்து, இன்று யாழ்ப்பாணத்தில் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

இன்று காலை யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து ஆரம்பமான பிரசார நடவடிக்கை,  நகர பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டது.

மக்கள் போராட்ட முன்னணியின் நிறைவேற்று குழு உறுப்பினர் வசந்த முதலிகே, புதிய ஜனநாயக மார்க்சிச லெனினிசக் கட்சியின் பொதுச் செயலாளர் சி.கா.செந்தில்வேல் உள்ளிட்ட கட்சியின் உறுப்பினர்கள் கலந்துகொண்டு மக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கியிருந்தனர்.

இதனிடையே ஜனாதிபதித் தேர்தலை பகிஸ்கரிக்கக் கோரி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால், வடக்கினை தொடர்ந்து கிழக்கிலும் துண்டுபிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுவருகின்றது.இன்றைய தினம் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தலைமையில் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. கட்சியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் உட்பட கட்சி ஆதரவாளர்கள் பலரும்; பங்கெடுத்திருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.