மன்னார் சிந்துஜாவின் கணவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அண்மையில் உயிரிழந்த இளம் தாய் சிந்துஜாவின் கணவர் எஸ்.சுதன் (26 வயது) அவரது சொந்த ஊரான வவுனியா, பணிக்கர் – புளியங்குளத்தில் நேற்று இரவு தவறான முடிவெடுத்து மரணமடைந்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை யில் கடந்த மாதம் இளம் தாய் ஒருவர் குழந்தை பெற்ற நிலையில் சில நாட்களின் பின்னர் இரத் தப்போக்கு காரணமாக மீண்டும் அந்த வைத் தியசாலைக்குச் சென்றபோது அங்கு வைத் தியசாலை ஊழியர்களால் கவனிக்கப்படாத நிலையில் உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்பட்டு பெரும் சர்ச்சை ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில், அவருடைய கணவர் தனது சொந்த ஊரான வவுனியா, பணிக்கர் – புளியங்குளத்தில் வசித்து வந்திருந்தார்.

நேற்று இரவு அவர் தவறான முடிவெடுத்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பான விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். மன்னாரில் சிந்துஜாவின் தாயாரிடம் உள்ள தனது பிள்ளையை அவர்கள் பார்க்க விடுவதில்லை என்று சிந்துஜாவின் கணவர் அண்மைக்காலமாகப் பலரிடம் தெரிவித்து வந்த நிலையில் அவர் மனவிரக்தியில் காணப்பட்டார் என்று தெரியவருகின்றது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.