தமிழ் எம்.பி மாரிற்கு கிடைத்த மதுபான உரிமங்கள் இரத்து
ஜனாதிபதி தேர்தலை முன்னிறுத்தி முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் வழங்கிவைக்கப்பட்ட அனைத்து புதிய மதுபான விற்பனை உரிமங்களையும் இரத்துச் செய்வதாக புதிய ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க அறிவித்துள்ளார்.
ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சியின் இறுதிக்காலகட்டத்தில் வழங்கப்பட்ட மதுபான விற்பனை அனுமதிபத்திரங்களை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இரத்துச் செய்வதாக ஜனாதிபதி அனுரதிசநாயக்க உத்தரவிட்டுள்ளார்.
முன்னதாக ஜனாதிபதி வேட்பாளர்களுள் ஒருவரான சஜித் பிறேமதாசா இத்தகைய நிலைப்பாட்டை அறிவித்து வந்திருந்தார்.
எனினும் அவர் வெற்றி பெற்றிராத நிலையில் புதிய ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க மதுபானச்சாலை உரிமங்களை இரத்து செய்துள்ளார்.
ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்து கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முதல் சுதந்திரக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரை மதுபான அனுமதிப்பத்திரங்களை பெற்றிருந்ததாக கூறப்படுகின்றது.
கிளிநொச்சி நகரப்பகுதியில் மட்டும் ஒரு மாத காலப்பகுதியினுள் எட்டு புதிய மதுபானச்சாலைகள் திறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.