அரச புலனாய்வு பணிப்பாளருக்கு எதிராக குற்றப்பத்திரம்
ஈஸ்டர் குண்டுத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முழு இழப்பீட்டுத் தொகையையும் வழங்கத் தவறியதற்காக முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் (எஸ்ஐஎஸ்) பணிப்பாளர் நிலந்த ஜயவர்தனவுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் இன்று நீதிமன்ற அவமதிப்பு வழக்கை ஆரம்பித்துள்ளது.
பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, நீதியரசர் முர்து பெர்னாண்டோ, நீதியரசர் எஸ்.துரைராஜா, நீதியரசர் ஏ.எச்.எம்.டி.நவாஸ், நீதியரசர் ஷிரான் குணரத்ன, குமுதுனி விக்கிரமசிங்க மற்றும் நீதியரசர் அச்சல வெங்கப்புலி ஆகிய 7 நீதிபதிகள் அடங்கிய அமர்வு, ஒக்டோபர் 7ஆம் திகதி காலை 9.30 மணிக்கு நீதிமன்றில் ஆஜராகுமாறு நிலந்த ஜயவர்தனவுக்கு அழைப்பாணை பிறப்பிக்குமாறு பிரதம நீதியரசர் தலைமையிலான ஏழு பேர் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்களுக்காக நிர்ணயிக்கப்பட்ட 75 மில்லியன் ரூபா நட்டஈட்டை முழுமையாக செலுத்தத் தவறியதன் காரணமாக இந்தக் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் இன்று (27) உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.