அரசியல்வாதிகளை பாடசாலை நிகழ்வுகளுக்கு அழைக்க தடை – பிரதமர் அதிரடி

அரசியல்வாதிகளை பாடசாலை நிகழ்வுகளுக்கு அழைப்பதை நிறுத்துமாறு பிரதமர் ஹரிணி அமரசூரிய பணிப்புரை விடுத்துள்ளார்.

அத்துடன், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் வெளியானமை தொடர்பில் சுயாதீன விசேட நிபுணர்களின் ஒத்துழைப்புடன் விசாரணைகளை நடத்தி தமக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

கல்வி அமைச்சின் பிரதானிகளுடனும் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது பிரதமர் இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளார்.

வினாத்தாள் வெளியாகியமையால் மாணவர்களுக்கு ஏற்பட்ட அநீதிக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இதுவரை தாமதமான சகல பரீட்சைகளினதும் பெறுபேறுகளை விரைவில் வெளியிடுமாறு அவர் பரீட்சைகள் திணைக்களத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.