தமிழரசில் இருந்து வெளியேறுகிறார் தவராசா
தமிழ் அரசு கட்சியில் இருந்து விலகுவதாக ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா அறிவிப்பினை விடுத்துள்ளார்.
யாழ் தேர்தல் மாவட்டத்தில் தமிழரசு கட்சி சார்பில் போட்டியிடவுள்ளவர்கள் எனக் குறிப்பிட்டு ஒன்பது பேர் கொண்ட பெயர் பட்டியலை சுமந்திரன் வவுனியாவில் வெளியிட்டுள்ளார்.
அவ்வகையில் சிவஞானம் சிறிதரன், எம்.ஏ.சுமந்திரன், எஸ்.ஈ.சீ.இளங்கோவன், கேசவன் சயந்தன், சந்திரலிங்கம் சுகிர்தன், சுரேக்கா சசீந்திரன், தியாகராஜா பிரகாஸ், இமானுவேல் ஆர்னோல்ட், கிருஸ்ண வேணி சிறிதரன் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன.
அவர்களில் சிவஞானம் சிறீதரன் தவிர்ந்த அனைவரும் சுமந்திரன் ஆதரவாளர்கள் என்றும் நியமனம் தொடர்பில் இழுபறி நிலை நீடித்ததாக அங்கிருந்து கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் தேர்தலில் போட்டியிட சந்தரப்பம் கோரியிருந்த நிலையில் அது கிடைக்காமையால் தவராசா வெளியேறும் முடிவை அறிவித்துள்ளார்.