யாழில் இரு ஆசனத்தை கைப்பற்றுவோம் – அருண் சித்தார்த்

நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் இரண்டு ஆசனங்களை கைப்பற்றுவோம் என சர்வஜன அதிகாரம் கூட்டணியின் யாழ்ப்பாண அமைப்பாளர் அருண் சித்தார்த் தெரிவித்துள்ளார்.

இன்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் மக்களுக்கு தெரிவிக்க எம்மிடம் ஒரு முக்கிய செய்தி உள்ளது. ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த புதிய இளைஞர்கள், யுவதிகள், அரசியல் செய்ய விரும்புபவர்கள் ஒரு செய்தியை கூற விரும்புகின்றோம்.

நாங்கள் யாழ்ப்பாணத்தில் பல கட்சிகளுடனும் தேசிய கட்சிகளுடனும் இணைந்து பல காலமாக வேலை செய்து இருக்கின்றோம். ஆனால் எங்களின் உழைப்பிற்கு சரியான இடத்தை யாரும் தரவில்லை என தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.