தமிழ் கட்சி சார்பில் போட்டியிடும் இரு பிக்குகள்
முன்னாள் மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழமக்கள் ஜனநாயக கட்சி (ஈபிடிபி) இரண்டு பௌத்த பிக்குகளை களமிறக்கிய முதல் தமிழ் கட்சி என்ற வரலாற்றை பெற்றுள்ளது.
பௌத்த பிக்குகளான கிரிபனாரே விஜித தேரர் மற்றும் உடவளவே ஜினசிறி தேரர் ஆகியோர் கொழும்பு மாவட்டத்தில் ஈ.பி.டி.பி சார்பாக போட்டியிடுகின்றனர்.
“தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக பொதுத் தேர்தலில் போட்டியிட தீர்மானித்ததாக ஈபிடிபி செயலாளர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்திருந்தார். தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதே எங்களின் ஒரே முயற்சியாகும். நாங்கள் பதவிகளுக்காக போட்டியிடவில்லை. நாங்கள் ஒரே இலங்கை தேசத்தை கட்டியெழுப்ப விரும்புகிறோம்” என வேட்புமனு கையளித்த பின் ஊடகங்களுக்கு விஜித தேரர் கருத்து தெரிவித்தார்.
கொழும்பு மாவட்டத்தில் உள்ள ஈபிடிபி பட்டியல் தமிழர்கள், முஸ்லிம்கள் மற்றும் சிங்களவர்கள் என அனைத்து சமூகங்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது.