பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர் ராஜினாமா

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் உட்பட 6 பேர் தமது பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர்.

நேற்றைய தினம் திங்கட்கிழமை ஜனாதிபதிக்கு தமது பதவி இராஜினாமா கடிதங்களை அனுப்பி வைத்துள்ளனர்.

ஜனாதிபதி செயலகத்தால் விடுக்கப்பட்ட அறிவிப்பின் பிரகாரமே அவர்கள் தமது பதவிகளை ராஜினாமா செய்தனர்.

இதன்படி, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க மற்றும் உப தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சந்தன பி. உடவத்த நேற்றுடன் அமுலுக்கு வரும் வகையில் குறித்த பதவிகளில் இருந்து இராஜினாமா செய்துள்ளதாக  எழுத்து மூலம் தெரிவித்துள்ளனர்.

மேலும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர்களும் தமது இராஜினாமா கடிதங்களை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

2020 இல் நியமிக்கப்பட்ட தற்போதைய பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு உறுப்பினர்களின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துடன் முடிவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.