பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற நபர் கைது

மட்டக்குளி பிரதேசத்தில் இலஞ்சம் கொடுக்க முயன்ற நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். போதைப்பொருள் கடத்தல் செய்வதற்காக இந்த நபர் மாதம் ஒரு இலட்சம் ரூபாய் இலஞ்சம் கொடுப்பதற்கு உடன்பட்டுள்ளார்.

நேற்றைய தினம் (16), குறித்த நபர் மட்டக்குளி பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரியை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, அந்தப் பிரதேசத்தில் போதைப்பொருள் கடத்தலை மேற்கொள்ள உதவ வேண்டும் என அவர் கோரினார்.

இதை பதில் பொறுப்பதிகாரி இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு உடனடியாக தகவல் கொடுத்தார். அதன் பின், குறித்த நபரை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து, அவர் 50,000 ரூபா கொடுக்க முயன்ற போது பொலிஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட நபர், மட்டக்குளி பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயதுடையவர் என தெரியவருகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.