வெளிவந்தது நடிகை சுனைனா காதல் ரகசியம்

தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் தொடர்ந்து பிஸியாக நடித்து வரும் நடிகை சுனைனா, 2008ஆம் ஆண்டு காதலில் விழுந்தேன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு, மாசிலாமணி, வம்சம், நீர்ப்பறவை, கவலை வேண்டாம், தொண்டன், லத்தி போன்ற பல படங்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.

சமீபத்தில், சமூக வலைத்தளங்களில் வைரலான ஒரு புகைப்படத்தில், சுனைனா ஒரு நபரின் கையை “லாக்” எனக் குறிப்பிட்டு பிடித்தபடி இருந்தார். இதனால், அந்த நபர் பிரபல யூடியூபர் காலித் அல் அமேரி என்றும், இருவரும் விரைவில் திருமணம் செய்யவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்தன.

சுனைனா நடித்த ராக்கெட் டிரைவர் படத்தின் ரிலீஸ் நெருங்கி வரும் நிலையில், அவர் அதைப் பற்றி பல பேட்டிகளில் பேசுகிறார்.

ஒரு பேட்டியில், லிவிங் டுகெதர் வாழ்க்கை குறித்த கேள்வி எழுப்பப்பட்டபோது, சுனைனா “what?” என்று கேள்வியைக் கோபத்துடன் திருப்பினார். பின்னர், தொகுப்பாளர் அவரிடம் காதலர் மற்றும் காதல் வாழ்க்கை குறித்து கேட்க, சுனைனா அதற்கு செருக்காக, “நான் சினிமாவை மட்டுமே காதலிக்கிறேன். எனது தனிப்பட்ட நேரத்தில் திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களை பார்க்கிறேன். அதை பொழுதுப்போக்காக அல்ல, அதனால் பல விஷயங்களை கற்றுக் கொள்கிறேன்,” என்று பதிலளித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.