உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை ராஜபக்ச மீது சுமத்த முயற்சி, சாகர கண்டனம்
![](https://lbctamil.com/wp-content/uploads/2024/10/sagara-kariyawasam-02.04.2021-780x418.jpg)
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம், உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் சம்பவத்தின் பொறுப்பினை பொதுஜன பெரமுனவின் தலைவர்களிடம் சுமத்த சில மதத்தலைவர்களும் அரசியல் கட்சிகளும் முற்படுவதாக குற்றம் சாட்டினார்.
அவர், 2019 குண்டுத்தாக்குதல்களை அரசியலுடன் தொடர்புபடுத்தி பொதுஜன பெரமுனவின் தலைவர்களை குற்றம்சாட்டுவதை ஏற்றுக்கொள்வதற்கான காரணமில்லை என்றும், இச்சம்பவம் தொடர்பான பொய்யான ஆவணப்படங்கள் வெளியிடப்பட்டதாகவும் குறிப்பிட்டார். காரியவசம், இமாம் அறிக்கையை எதிர்பார்ப்பதாகவும், உதய கம்மன்பில வெளியிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாக நாட்டு மக்கள் சார்பில் நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார்.