கிழக்கை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படலாம் – அமெரிக்கா தூதரகம் எச்சரிக்கை
கிழக்கு மாகாணத்தில் அம்பாறையில் உள்ள அறுகம்குடா பகுதியில் உள்ள சுற்றுலாத் தலங்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்படலாம் என்ற தகவல் கிடைத்திருப்பதாக இலங்கையில் உள்ள அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில் மறு அறிவித்தல் வரை, அமெரிக்கப் பிரஜைகள் அந்த பகுதியில் சுற்றுலா செல்ல வேண்டாம் என அமெரிக்கத் தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், எதேனும் சந்தேகமான நடவடிக்கைகள் நடந்தால் 119 என்ற அவசரத் தொலைபேசி இலக்கத்திற்கு உடனடியாக தகவல் வழங்குமாறும், தொலைபேசிகளை வைத்திருக்குமாறும், இலங்கையின் உள்ளூர் ஊடகங்களில் வெளியிடப்படும் செய்திகளைப் பின்பற்றுமாறும் அந்நாட்டு பிரஜைகளுக்கு அமெரிக்க தூதரகம் வலியுறுத்தியுள்ளது.