இலங்கைக்கு விமானம் வழங்கிய அவுஸ்திரேலியா
இலங்கைக்கு Beechcraft King Air 350 என்ற Royal Australian Air Force கண்காணிப்பு விமானத்தை, அவுஸ்திரேலியா இலவசமாக வழங்கியுள்ளது.
இந்த விமானம், விமானப்படையின் வான்வழி கடல்சார் கண்காணிப்பு மற்றும் உளவுத் திறன்களை விரிவுபடுத்தும் வண்ணம் செயல்படும், மேலும் அமைதியான மற்றும் பாதுகாப்பான இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தை பாதுகாக்க இலங்கையின் தொடர்ச்சியான முயற்சிகளுக்கு முக்கிய பங்கினை வகிக்கின்றது.
அவுஸ்திரேலியா இந்த விமானத்தை இலங்கைக்கு வழங்குவதன் மூலம், இரு நாடுகளுக்குமான வலுவான கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துகிறது. இது மனித கடத்தலை தடுப்பதற்கு மற்றும் பிராந்திய ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதற்கான கூட்டு அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்துகிறது, என இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.