புலனாய்வு தகவல் கிடைத்ததும் உடனடி நடவடிக்கை – அனுர

புலனாய்வு தகவல்களை அடிப்படையாகக் கொண்டு பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளும் அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க உறுதியளித்துள்ளார்.

புலனாய்வு தகவல்கள் குறித்து செய்தியாளர்களுக்கு உரையாற்றுவதில்லை என தெரிவித்த அவர், “நாங்கள் துரிதமாக செயற்பட்டு சிலரைக் கைதுசெய்துள்ளோம்” என குறிப்பிட்டார்.

செய்திகளில் வெளிவராவிட்டாலும், அனைவரின் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

இரு வாரங்களுக்கு முன் புலனாய்வு தகவல்கள் கிடைத்ததும், அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்ததாகவும், பலரை கைதுசெய்வதன் மூலம் எந்த சம்பவமும் ஏற்படாமல் தடுப்பதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.