யாழில் இரத்த வாந்தி எடுத்து 34 வயது நபர் உயிரிழப்பு
யாழ்ப்பாணம் கரவெட்டி பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய நபர் இரத்த வாந்தியால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவருக்கு பல ஆண்டுகளுக்கு முன்னர் மின்சாரம் தாக்கிய சம்பவம் காரணமாக, அவ்வப்போது வாந்தி ஏற்படும் நிலை இருந்ததாக தெரிகிறது. கடந்த வெள்ளிக்கிழமை (25) காலை 10 மணியளவில் இரத்த வாந்தி ஏற்பட்டதால் அவரை மந்திகை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டாலும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.