சங்குப்பிட்டிப் பால புனரமைப்பு
கேரதீவு சங்குப்பிட்டிப் பாலத்தின் புனரமைப்பு பணிகள் இன்று (26.10.2024) காலை 10 மணியளவில் யாழ்ப்பாண மாவட்ட செயலர் திரு. மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் மேலாய்வு செய்யப்பட்டது.
அவர் அதிகாரிகளுடன் நேரடியாக கலந்துரையாடி, புனரமைப்பின் தற்போதைய நிலை மற்றும் முன்னேற்றங்களை ஆராய்ந்தார்.
ஆபத்தான நிலையை காணப்பட்ட இந்தப் பாலத்தின் புனரமைப்பு மிகவும் அவசியமானதாக காணப்பட்ட நிலையில், புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்படு வருகிறது.