யாழில் முதியவர் சடலமாக மீட்பு

யாழ்ப்பாணம் திருநெல்வேலி கேணியடி பகுதியில் தனிமையில் வாழ்ந்து வந்த 79 வயதான முதியவர், அவரது வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்று (26) நல்லூர் பிரதேச செயலக அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளின் போது, முதியவரின் வீட்டை அணுகியபோது அவர் துவிச்சக்கர வண்டி மீது விழுந்த நிலையில் சடலமாகக் காணப்பட்டார்.

இறப்புச் செய்தியைப் பெற்ற கோப்பாய் பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து, சடலத்தை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு நடத்தப்பட்ட உடற்கூற்று பரிசோதனையின் மூலம், மாரடைப்பு காரணமாகவே அவர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.