யாழ் சாட்டி துயிலும் இல்லத்தில் சிரமதானம் ஆரம்பம்

நவம்பர் 27 ஆம் திகதி மாவீரர் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் நினைவேந்தல் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. இந்நிகழ்வின் ஒருபகுதியாக, தீவக நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவினால் சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதான பணிகள் இன்று காலை (நவம்பர் 2) தொடங்கப்பட்டது.

இந்நிகழ்வில் பொதுச் சுடர் ஏற்றப்பட்டு, மலர் தூவி மாவீரர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதன் பின்னர் துயிலும் இல்லத்தில் துப்பரவு மற்றும் சிரமதானப் பணிகள்  முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த சிரமதானப் பணிகளில் மாவீரர்களின் பெற்றோர்கள், உறவினர்கள், முன்னாள் போராளிகள், சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.