மத வழிபாட்டுத் தலங்களில் முப்படையினர் அகற்றப்படவில்லை – பாதுகாப்பு அமைச்சு

பாதுகாப்பு அமைச்சு, முப்படையினர் மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்கள உறுப்பினர்கள் மத வழிபாட்டுத் தலங்களில் இருந்து அகற்றப்பட்டதாக வெளியான தகவல்களை மறுத்துள்ளது. இன்று (03) நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில், பாதுகாப்பு அமைச்சின் பாணிப்பாளரும் ஊடகப் பேச்சாளருமான கேணல் எம்.பி.பி.நளின் ஹேரத், இந்த தகவல் தவறானது என உறுதிப்படுத்தினார்.

சமூக ஊடகங்களில் இந்த தகவல்கள் பரப்பப்பட்டுள்ளதாகவும், அவை உண்மையற்றவை எனவும் அவர் தெரிவித்தார். முன்னதாகவே, X தளத்தில் வெளியிடப்பட்ட அறிவிப்பின் மூலம் இதுபற்றி விளக்கமளிக்கப்பட்டு, செய்தி நிராகரிக்கப்பட்டிருந்தது என்றும் குறிப்பிட்டார்.

இதன் மூலம் மத வழிபாட்டுத் தலங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், பொதுமக்கள் அவ்வாறான தவறான தகவல்களை நம்ப வேண்டாம் என்றும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.