வடக்கில் இராணுவ முகாம்களை நீக்க இழப்புறுத்தல்கள் மதிப்பீடுகள் தேவை – பாதுகாப்பு அமைச்சு
வடக்கில் இராணுவ முகாம்களை அகற்றுவது தொடர்பில், பாதுகாப்பு அச்சுறுத்தல் மதிப்பீடுகளை மேற்கொள்ளாமல் தீர்மானிக்க முடியாது என்று பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பணிப்பாளர் கேர்ணல் நளின் ஹேரத் தெரிவித்தார்.
ஸ்ரீஜயவர்தனபுர கோட்டையில் நேற்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டில், வடக்கிலுள்ள முகாம்களை அகற்றுமாறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டதை குறிப்பிடும் போது, அவர் இதனை தெரிவித்தார்.
முகாம்களை அகற்றுவதற்கான வழிமுறைகள் இருக்கின்றன, அதற்கான முதலில் அச்சுறுத்தல் மதிப்பீடு மேற்கொள்ள வேண்டும். அச்சுறுத்தல் மதிப்பீட்டின் பின்னரே இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என்று அவர் மேலும் கூறினார்.
இதற்கான நடவடிக்கைகள் வடக்கு மாகாண ஆளுநரின் கோரிக்கையின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுவதாகவும், பாதுகாப்பு தொடர்பான விடயங்களில் மூன்றாவது முப்படையும் பொலிஸாரும் மிகுந்த கரிசணையுடன் செயற்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள பாதுகாப்பு சேவை தலைமையகத்தினால் மேற்கொள்ளப்பட்ட அச்சுறுத்தல் மீளாய்வு அறிக்கையின் அடிப்படையில், தற்போது கடந்த முதலாம் திகதி முதல் யாழ்ப்பாணம் – பலாலி வீதியை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதியுயர் பாதுகாப்பு வலயம் குறைக்கப்படவில்லை, எனவே அந்த வீதிக்கு வெளியில் செல்ல எவருக்கும் அனுமதி இல்லை என்றும், பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றும் மேஜர் ஜெனரல் கே.ஏ.என்.ரசிக குமார தெரிவித்தார்.