பிரமிட் திட்டத்தில் மோசடியில் ஈடுபட்டவர் விமான நிலையத்தில் கைது
பிரமிட் மோசடியில் ஈடுபட்டு பெரும் தொகை பணத்தை தப்பியோட்டிய நபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று (08) கைது செய்யப்பட்டார்.
ஒரு வருடத்திற்கு முன்பு பிரமிட் திட்டத்தால் 10 பில்லியன் ரூபாய் மோசடி செய்து வெளிநாட்டுக்கு தப்பியோடிய இவர், மலேசியாவில் இருந்து நாடு திரும்பும் போது கைது செய்யப்பட்டார்.
குருணாகல் பகுதியைச் சேர்ந்த இந்த சந்தேக நபருடன், விமான நிலையத்தில் அவரை வரவேற்க வந்த அவரது மனைவியும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக பிரதி பொலிஸ்மா அதிபர், சட்டத்தரணி நிஹால் தல்துவ அறிவித்துள்ளார்.