தபால்மூல வாக்களிப்பு இன்றுடன் நிறைவு
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிக்க வழங்கப்பட்ட காலப்பகுதி இன்று நிறைவடைகிறது. கடந்த ஒக்டோபர் 30, நவம்பர் 1 மற்றும் 4ஆம் தேதிகளில் தபால் மூல வாக்களிக்க முடியாத வாக்காளர்களுக்கு, நேற்றும் இன்றும் விசேட வாக்குப்பதிவுத் தினங்களாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்தது.
அதன்படி, தமது பணியிடங்களின் மாவட்டங்களில் தபால் மூல வாக்குகளை அடையாளப்படுத்தாத வாக்காளர்களுக்கு இன்று தமது வாக்குகளை பதிவுசெய்யும்விதமாக சந்தர்ப்பம் வழங்கப்படுவதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.