நாட்டரிசிக்கு தட்டுப்பாடு – டி.கே ரஞ்சித் தெரிவிப்பு!
நாட்டரிசி பியர் (Beer) தயாரிப்பில் பயன்படுத்தப்படுவதால் நாட்டரிசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக, சிறு மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்க தலைவர் டி.கே. ரஞ்சித் தெரிவித்தார். எதிர்வரும் ஜனவரி மாதம் இறுதி வரை நாட்டில் நாட்டரிசி தட்டுப்பாடு தொடரும் என்றும், விலைக் கட்டுப்பாட்டை நீக்க முடியாவிட்டால், அரசாங்கம் அரிசியை இறக்குமதி செய்து சதொச மற்றும் கூட்டுறவு சங்கங்கள் மூலம் மக்களுக்கு விற்பனை செய்ய வேண்டும் என அவர் கூறினார்.
மேலும், கடந்த பெரும் போகத்தில் உற்பத்தி செய்யப்பட்ட நெல்லின் குறிப்பிட்ட ஒரு தொகை தற்போது கையிருப்பில் உள்ளது. அந்த நெல் தொகை முன்னேற்பாடாக பயன்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.