காட்டு யானை தாக்குதலுக்கு இலக்காகி குடும்பஸ்தர் பலி
மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளி பொலிஸ் பிரிவின் திக்கோடை தும்பாலைக் கிராமத்தைச் சேர்ந்த 8 பிள்ளைகளின் தந்தை கார்த்திகேசு உருத்திரகாந்தன் (வயது 56) ஞாயிற்றுக்கிழமை இரவு காட்டு யானை தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
கார்த்திகேசு உருத்திரகாந்தன் கருங்கல் உடைக்கும் தனது வேலைப்பாடு நடத்திய இடத்திலேயே யானை தாக்கியதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். அவரது சடலம் தற்போது களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் பிரதே பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
வெல்லாவெளிப் பிரதேசத்தில் பல ஆண்டுகளாக காட்டு யானைகளின் தாக்கம் அதிகரித்துள்ளது, இதனால் மக்களின் வாழ்க்கை பெரும் சிரமங்களை சந்தித்துவருகின்றது.