பொதுத் தேர்தலை கண்காணிக்க 20க்கும் மேற்பட்ட வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்பாளர்கள்

நவம்பர் 14 ஆம் திகதி இலங்கையில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலை கண்காணிக்க 20க்கும் மேற்பட்ட வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் பங்கேற்க உள்ளனர் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இக்கண்காணிப்பாளர்கள் தெற்காசிய நாடுகளைச் சேர்ந்தவர்களும் இதிலுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்கவின் கூற்றுப்படி, தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் அழைப்பின் பேரில் 10 கூடுதல் வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் வரவுள்ளனர். இதில் ரஷ்யா மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளின் கண்காணிப்பாளர்களும் அடங்குவர்.

அவர்கள் ஆணைக்குழு உறுப்பினர்களை சந்தித்த பின்னர், தேர்தல் கண்காணிப்புப் பணிகளை ஆரம்பிப்பர். மேலும், *The Asian Network for Free Elections (ANFREL)* எனும் சர்வதேச அமைப்பின் கண்காணிப்பாளர்கள் குழு நேற்று தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகளை சந்தித்து தமது கண்காணிப்பு பணிகளை தொடங்கியுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.