அநுராதபுரத்தில் ஹெரோயினுடன் சட்டத்தரணி கைது
அநுராதபுரம் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் 42 வயதுடைய சட்டத்தரணி ஒருவர் நேற்று திங்கட்கிழமை (11) கைது செய்யப்பட்டுள்ளார் என அநுராதபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் அநுராதபுரம் நீதிமன்றத்தில் கடமையாற்றுபவர் மற்றும் போதைப்பொருளுக்கு அடிமையாகியவர் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபரிடமிருந்து 2.3 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது, மேலும் இது தொடர்பான மேலதிக விசாரணைகள் தற்போது அநுராதபுரம் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.