தரமற்ற மருந்து விநியோக விவகாரம்

அரசாங்க வைத்தியசாலைகளுக்கு தரமற்ற மருந்துகள் விநியோகித்த தொடர்பான வழக்கில் 18 முன்னாள் அமைச்சர்களிடம் வாக்கு மூலங்களைப் பதிவு செய்யுமாறு மாளிகாகந்த நீதவான் லோச்சனி அபேவிக்ரம உத்தரவிட்டுள்ளார்.

இவ்வழக்கில், கெஹெலிய ரம்புக்வெல்ல சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரத்திற்கு ஒப்புதல் அளித்த அமைச்சரவை உறுப்பினர்களான முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்தன, மற்றும் முன்னாள் அமைச்சர்களான திரான் அலஸ், மஹிந்த அமரவீர, விஜயதாச ராஜபக்ஷ, ஹரின் பெர்னாண்டோ, ரொஷான் ரணசிங்க, நிமல் சிறிபால உட்பட 18 பேரிடம் வாக்குமூலங்கள் பெறப்பட வேண்டும் என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சட்டமா அதிபர் சார்பாக ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் லக்மினி கிரிஹாகம, இதற்கான உத்தரவை வழங்குமாறு கோரியதையடுத்து, நீதவான் அனுமதியளித்து இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.