யாழில் வாக்குப்பெட்டிகள் வாக்குச் சாவடிகளுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன!
யாழ். மாவட்டத்துக்கான வாக்குப் பெட்டிகள் வாக்களிப்பு நிலையங்களுக்கு கொண்டு செல்லும் பணிகள் இன்று (13) காலை 8.30 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
முதலாவது பேருந்து வாக்குப் பெட்டிகளை ஏற்றிக் கொண்டு புறப்பட்டு, இப்பணியில் யாழ். தேர்தல் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் மருதலிங்கம் பிரதீபன் மற்றும் யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லூஸன் சூரியபண்டார ஆகியோர் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த நடவடிக்கை, வாக்குப்பதிவின் நிச்சயமான மற்றும் பாதுகாப்பான ஒழுங்குகளை உறுதிப்படுத்தும் வகையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.