மின்சாரக் கட்டணக் குறைப்பு தொடர்பில் விசேட அறிவிப்பு!
இலங்கை மின்சார கட்டணத்தை குறைக்கும் புதிய பிரேரணையை அடுத்த வாரத்தில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவில் சமர்ப்பிக்க இலங்கை மின்சார சபை திட்டமிட்டுள்ளது.
முன்னதாக, மின்சார கட்டணத்தை குறைப்பதற்கான முன்மொழிவுகள் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் தாக்கல் செய்யப்பட்டதாக மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் தனுஷ்க பராக்கிரமசிங்க தெரிவித்தார். இந்த முன்மொழிவை மீளாய்வு செய்யவேண்டும் எனவும், கடந்த 8ஆம் திகதி சமர்ப்பிக்க வேண்டிய காலவரையரையுடன், மேலும் இரண்டு வார கால அவகாசம் அளிக்குமாறு மின்சார சபை கோரிக்கை வைத்தது.
இத்தகைய சூழலில், புதிய மின்கட்டண முன்மொழிவு அடுத்த வாரம் ஆணைக்குழுவில் அதிகாரப்பூர்வமாக விவாதிக்கப்பட உள்ளது.