முல்லைத்தீவில் வாக்குச் சாவடிகளுக்கு முன்பாக பொறிக்கப்பட்டுள்ள வேட்பாளர்களின் சின்னம்
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள விசுவமடு மற்றும் புதுக்குடியிருப்பு வாக்களிப்பு நிலையங்களுக்கு முன்பாக, பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் சின்னங்கள் மற்றும் இலக்கங்கள் வீதிகளில் பொறிக்கப்பட்டிருந்தன. இது தொடர்பாக ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்கா (TISL) தேர்தல் கண்காணிப்பாளர்கள் நேற்றுபுதன்கிழமை (13) பொலிஸாருக்கு முறையிட்டனர்.
ஆனால், அதனை அகற்றுவதற்கான உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படாததால், இன்று காலை மீண்டும் தேர்தல் கண்காணிப்பாளர்கள் பொலிஸாருக்கும் தேர்தல் திணைக்களத்திற்கும் தகவல் வழங்கினர். அதன் பின்னர் பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று, அங்கு பொறிக்கப்பட்டிருந்த சின்னங்கள் மற்றும் இலக்கங்களை அகற்றியுள்ளனர்.