முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைதியான முறையில் வாக்களிப்பு
முல்லைத்தீவு மாவட்டத்தில் புதிய பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்யும் தேர்தல் இன்று காலை அமைதியான முறையில் தொடங்கியுள்ளது.
வாக்கு பதிவுகள் காலை 7 மணிக்கு ஆரம்பமான நிலையில் புதிய பாராளுமன்ற உறுப்பினர்களை தேர்வு செய்ய மக்கள் உற்சாகத்துடன் வாக்களித்து வருகின்றனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் 137 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன, மேலும் 86,869 வாக்காளர்கள் இன்று வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
இந்த தேர்தல் பணிக்காக சுமார் 1,500 அரச உத்தியோகத்தர்கள் மற்றும் 500 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர், அத்துடன் தேர்தல் கண்காணிப்பாளர்கள் தேர்தல் செயல்முறையை கண்காணித்து வருகின்றனர்.