பாடசாலை மாணவர்களுக்கு அரசாங்க கொடுப்பனவு திட்டம் ஆரம்பம்!
பாடசாலை உபகரணங்களை கொள்வனவு செய்ய முடியாத மாணவர்களுக்கு உதவிக் கொடுப்பனவு வழங்கும் திட்டத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த திட்டம் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் நிதி சுமையை குறைத்து, குழந்தைகள் பள்ளிப் படிப்பை தகுந்த முறையில் தொடர உதவியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தகுதியான மாணவர்களின் விவரங்களை சேகரிக்கும் வேலைத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நாளைய தினத்திற்குள் இவை பற்றிய அனைத்து தகவல்களையும் அதிகாரிகளுக்கு வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இக் கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கைகள் அடுத்த வருடம் தொடங்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உறுதிப்படுத்தியுள்ளார்.